ட்விட்டர் கணக்குகளில் ஃபேக் ஐ.டி.கள் தவிர்க்க முடியாதவை. அதிலும் பிரபலங்களுக்கு அழகே அதிக அளவிலான ஃபேக் ஐ.டிகள்தான். அப்படி தனக்கும் ஒர் ஃபேக் ஐடி உருவாகி அது ஓவர் உற்சாகமாக செயல்படுவதைக் கண்டு ‘நன்றி சொல்ல உனக்கு ஒரு வார்த்தை இல்லை எனக்கு’ எனத் தவிக்கிறார் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் அண்ட் ஹாட்டஸ்ட் நாயகி பிரியா பவானி சங்கர்.

‘மேயாத மான்’ல் அறிமுகமானபோது தமிழ்சினிமாவின் கடைக்குட்டி சிங்கமாக இருந்த பிரியா ப.சங்கர் ‘மான்ஸ்டர்’ ரிலீசுக்குப்பின்னர் ’அடுத்த விஜய் ஹீரோயின் இவுகதான்’ என்று வலைதளங்கள் வதந்திகள் எழுதுமளவுக்கு மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாகியிருக்கிறார்.

இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ட்விட்டர் பக்கத்தில் அவரது ரசிகர் ஒருவர் பிரியாவின் அதே பெயரில் ஒரு ஸ்பெல்லிங் கூட மாற்றாமல் சின்னதாக ஒரு ஸ்பேஷ் மட்டும் விட்டு ஒரு ஃபேக் அக்கவுண்ட் துவக்கியிருக்கிறார். மட்டுமின்றி மிக சுறுசுறுப்பாக மணிக்கொருமுறை அப்டேட்களும் தந்து பிரியாவையே அசரவைத்துக்கொண்டிருக்கிறார்.

அந்த ஃபேக் ஐ.டி.க்கு இன்று சற்றுமுன்னர் ஒரு ட்விட் போட்ட பிரியா,..டியர் ஃபேக்...என் பெயர்ல எதையாவது பதிவு பண்ணிக்கிட்டே இருக்கணும்ங்குற உங்க ஆர்வம் புரியுது. ஆனா மணிக்கொரு தடவை அப்டேட் பண்ணி என்னை தர்மசங்கடப்படுத்தாதே. அந்த அளவுக்கு ஆக்டிவா என்னால உன்னை ஃபாலோ பண்ண முடியலை. தேங்க்ஸ் பட் நோ தேங்க்ஸ்’ என்று ‘எலி’ முழி முழிக்கிறார் பிரியா.