மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர் மீடியா மீதான ஆர்வத்தில் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஸ்டார் ஆன்கராக வலம் வந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.

ஒரே சீரியலில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல நடிகை என்று பெயர் பெற்றார். இதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்திலும் பிரியா பவானி சங்கர் நன்றாகவே நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு வேறு எந்த படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகவில்லை. வாய்ப்பு தேடி வரும் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதற்கு காரணம் சீரியலிலும் சரி, படத்திலும் சரி இழுத்து போர்த்திக் கொண்டு நடித்திருப்பது தான் என்று பிரியாவுக்கு சொல்லியுள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்தார் பிரியா பவானி சங்கர். ஏற்கனவே ஒரு முறை மிகவும் டிரான்ஸ்பரன்டான ஒரு டிரஸ் போட்டு ரசிகர்களை கதறவிட்டவர், தற்போது தன்னுடைய தொடை தெரியும் படி ஒரு டிரெஸ்சுடன் போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இது போன்ற படங்களை பார்த்து தான் கவர்ச்சிக்கும் தயார் என்று தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள் என்று பிரியா பவானி சங்கர் காத்திருக்கிறாராம்.