செய்தியாளராக தொலைக்காட்சியில் மின்னிய பிரியா பவானி ஷங்கரை, சீரியல் நடிகையாக மாற்றியது பிரபல தனியார் தொலைக்காட்சி தான். இவர் நடித்த 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பு இவரை சின்னத்திரையில் இருந்து... வெள்ளித்திரைக்கு அழைத்து சென்றது. 

'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே வெற்றி பெற்றதால், பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக ஒரு படத்திலும், எஸ்.ஜெ.சூர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

மேலும் இதுவரை துளியும் கவர்ச்சி காட்டாமல் இழுத்து மூடிக்கொண்டு நடித்த இவர், இனி அப்படி மட்டும் நடிக்காமல்... கொஞ்சம் கவர்ச்சிலும் தாராளம் காட்டி நடிக்கும் முடிவுக்கு வந்து விட்டார் என ஏற்கனவே தகவல் வெளியாகி வந்த நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக பிரியா பவானி தொடை தெரியும்படி, ஒரு புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இவருடைய ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சியாக்கியுள்ளது.