இணையத்தில் வைரலாகும் பிரேமலதா விஜயகாந்தின் டப்ஸ்மேஷ் வீடியோ!!!

premalatha vijayakanth dubsmash going viral online
First Published May 17, 2017, 10:31 AM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



அரசியலில் அனல் பறக்க பேசிவருபவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த். இவர் தனது மூத்த மகன் விஜய பிரபாகரனுடன் சேர்ந்து ஒரு டப்ஸ்மேஷை வெளியிட்டுள்ளார்.

"வேலையில்லா பட்டதாரி'' படத்தில் சரண்யா பொன்வண்ணன் தனுஷ் பேசும் டயலாக்கை பிரேமலதாவும் அவரது மூத்த மகன் விஜய பிரபாகரனும் பேசியுள்ளனர். 'உனக்கு லவ்வெல்லாம் இருக்காடா? என கேட்பார். என்னயெல்லாம் யாருமே லவ் பண்ணுவாங்க என மகன் பதில் சொல்வதற்கு ஏன் உனக்கு அழகில்லையா? அறிவில்லையா? என்னடா கொறச்சல் என டயலாக்கை கண்களை உருட்டி கைகளையாட்டி கேட்பார் பிரேமலதா.

அதற்கு வேலையில்லமா என விஜய பிரபாகரன் சொல்வதைப்போல இருக்கிறது டப்ஸ்மேஷ். அம்மாவும் மகனும் செய்த இந்த டப்ஸ்மேஷ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

Video Top Stories