வல்லவன், காளை,  மங்காத்தா, பிரியாணி, ஜில்லா, போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு,  சிறு வேடத்தில் நடித்துள்ளவர் நடிகர் மஹத்.  மேலும் கடந்த வருடம் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விளையாடினார். 

சில சமயங்களில், நடந்து கொள்ளும் விதம் மக்களுக்கு பிடிக்காததால், ஒரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் பெமினா மிஸ் இந்தியா 2012 பட்டம் வென்ற, மாடலும், தொழிலதிபருமான, பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்தார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் போது கூட, தன்னுடைய காதலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். 

அங்கு நடிகை யாஷிகாவுடன் காதல் ஏற்பட்டதாக மகத் கூறியது, பிராச்சி மற்றும் மஹத்துக்கு இடையே ஒரு விரிசலை ஏற்படுத்தியது.  பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தன்னுடைய வாழ்வில் பிராச்சியை தவிர வேறு யாரும் இல்லை என்றும் கூறினார்.

 எப்படியோ ஒரு வழியாக இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வந்த நிலையில்,  சமீபத்தில் இவர்கள் இருவருக்கும்  திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.  இதைத் தொடர்ந்து இருவரும் அவ்வப்போது ஒன்றாக வெளியில் ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளனர்.

பிராச்சி மற்றும் மகத் இருவரும் தற்போது ஜோடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  அங்கு  கோல்ட் கோஸ்டில் எடுத்த பிகினி புகைப்படங்களை பிராச்சி வெளியிட்டுள்ளார்.


திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில்,  இப்படி புகைப்படங்கள் வெளியிடுவதா? என ரசிகர்கள் இவரை விமர்சித்து வருகின்றனர்.