மங்காத்தா, பிரியாணி, ஜில்லா போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களால் நடிகராக அறியப்பட்டவர் மஹத். இவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 70 வதாவது நாளில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தற்போது, 'கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா' , ' இவன் உத்தமன்' ஆகிய படங்களில் நாயகனாகவும், விஜய் டிவி தொலைக்காட்சியில் நடைபெற்று வரும், டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கும் பெமினா மிஸ் இந்தியா, மிஸ் எர்த் ஆகிய உலக அழகி பட்டங்களை பெற்றுள்ள பிராச்சி மிஸ்ராவிற்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில், மஹத் மற்றும் பிராச்சியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்: நாய் பிஸ்கட்டை சாப்பிடுபவர் ராஷ்மிகா! உண்மையை உளறிய ஹீரோ! கடுப்பான நடிகை!

இந்நிலையில் தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ள பிராச்சி, ஏற்கனவே.. மஹத் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டிக்கு தனியாக படுத்து கொள்ள பெட் இருந்தும், அது தங்களுக்கு நடுவில் தான் படுத்து கொள்வதாக கூறி பெட்ரூம் சீக்ரெட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இதே போல் தங்கள் இருவரில் மகத் தான் முத்தம் கொடுப்பதில் பெஸ்ட் என தங்களுடைய அந்தரங்க விஷயத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார் பிராச்சி. மேலும் பல நேரங்களில் மஹத் தான் பிராச்சியிடம் மன்னிப்பு கேட்பாராம். அதற்கு ஏற்ற போல் அவர் மீது தான் தவறும் இருக்குமாம். பிரச்சிக்கு கோவம் வந்தால் அது 5 மணி நேரமாவது இருக்குமாம். அதுவரை செய்த தவறுக்கு மஹத் மன்னிப்பு கேட்டு கொண்டேனா இருப்பாராம்...