நேற்று தனது 32வது  பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சார்மி தான் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து தனது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

2002ல் தனது 15 வது வயதில் ‘நீ தோடு காவாலி’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான சார்மி அதே ஆண்டில் ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி பிரபலமானார். எந்த எல்லைக்கும் போய் படு கவர்ச்சியாக நடிக்கத் துணிந்தவரான சார்மி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவந்தார்.

கடந்த வாரம் த்ரிஷாவின் பிறந்தநாளன்று கூட அவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய சார்மி, ‘இப்பதான் ஓரினச் சேர்க்கையை அரசாங்கமே அனுமதிக்குதே நாம திருமணம் செய்துகொள்ளலாமா? என்று கேட்டு பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.  

சமீபத்தில் தெலுங்குத் திரையுலகினர் அதிகமாக போதைப் பொருட்கள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டில் சார்மியின் பெயர் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் அடிபட போலீஸ் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். இந்த விசாரனையால் மனம் வெறுத்துப்போய்தான் சார்மி தனது சினிமா ரிடையர்மெண்டை அறிவித்திருக்கிறார் என்பது தெரிகிறது. ’ஆனாலும் திரைத்துறையை விட்டு ஒரேயடியாக வெளியேறிவிடாமல் ஒரு தயாரிப்பாளராக தனது சேவையைத் தொடரவிருப்பதாக ஒரு ஆறுதல் செய்தியை தனது ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார் சார்மி.