பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தலைவியாக இருக்கும் ஐஸ்வர்யா... பிக்பாஸ் ராணியாக உருவெடுத்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து இவர் மற்ற போட்டியாளர்களுக்கு கொடுக்கும் தண்டனைகள் மற்றும் அவர்களை நடத்தும் விதம் அத்து மீறிவதாக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று முன்தினம் இவர் டாஸ்குகள் செய்யாமல் இருந்த பாலாஜி  மீது குப்பைகளை கொட்டி அனைவர் மத்தியிலும் அசிங்கப்படுத்தினார். இதனால் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவருக்கு பிக்பாஸ் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பொதுமக்களாக இருக்கும்... ஷாரிக், மஹத், யாஷிகா, மற்றும் ரித்விகா ஆகியோரை ஜெயிலில் அடைத்துள்ளார் ஐஸ்வர்யா.

இவர்கள் சர்வாதிகாரம் ஒழிக, மக்கள் ஆட்சி வேண்டும் என கூறி போராளிகள் போல் குரல் எழுப்புகிறார்கள். பின் இவர்களை தேடி வரும் ஐஸ்வர்யா திமிராக எதோ பேசி ஜெயில் இருப்பவர்களை வெளியில் விட முடியாது என்று கூறுகிறார் என்பது போல் தெரிகிறது. 

இதனால் இவரை பிடித்து அடக்கி, போட்டியாளர்களை விடுவித்து. ஐஸ்வர்யாவை தண்ணீரில் தள்ளி விடுகிறார் பொன்னம்மபலம். இவருக்கு உதவியாக சென்ராயன் செயல் படுகிறார் என்பது அவர் அருகில் நிற்பதில் இருந்தே தெரிகிறது.