இதை தொடர்ந்து, ஜனவரி 16 ஆம் தேதி சூப்பர் ஸ்டாரின் மருமகன் இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் வெளியாக உள்ளது. இவ்விரு படங்களை அடுத்து இந்த வருட பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்டிருந்த, மிர்ச்சி சிவாவின் 'சுமோ' மற்றும் நடிகர் பிரபு தேவாவின் 'பொன் மாணிக்கவேல்' ஆகிய இரு படங்களின் ரிலீஸ் தேதி தற்போது வரை அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

எனவே, இந்த இரு படங்கள் வெளியாகுமா? அல்லது பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்குமா என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

எனினும் பொங்கல் திருவிழாவின் நெருக்கத்தில் 'பொன்மாணிக்க வேல்' அல்லது 'சுமோ' ஆகிய இரண்டு படங்களில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதியாவது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.

அதே நேரத்தில், இவ்விருபடங்களும் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் பின் வாங்கினால், இந்த வருட பொங்கலுக்கு மாமனாரின் தர்பாருக்கு பின் மருமகன் பட்டாஸ் வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.