அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நடிகையான வேனசா மார்க்கஸ் போலிசாரால் சுட்டுக்கொள்ளப்பட்டார்.

1994முதல் 1997வரை தொலைக்காட்சியில் வெளியான இஆர் என்னும் தொடரில் செவிலியர் வெண்டி கோல்டுமேனாக நடித்தவர் வேனசா மார்க்கஸ்.சீன்பீல்டு, மெல்ரோஸ் பிளேஸ் உள்ளிட்ட பல தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இவர் தான் நடித்த இஆர் தொடரில் இடம்பெற்ற ஜார்ஜ் குளூனி என்பவர் மீது, பாலியல்  குற்றச்சாட்டை வைத்தார். பின்னர் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார். 

இந்நிலையில் அவருக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட வீட்டு உரிமையாளர் நடிகையின் பிரச்சனை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.விரைந்து வந்த  காவலர்கள்   வீட்டின்  வெளியே  நின்று  கதவை திராக்கும் படி நடிகையிடம் கேட்டுக்கொண்டதாக  தெரிகிறது.

அப்போது, காவலர்களை நோக்கி பொம்மைத் துப்பாக்கியை நீட்டியவாறு அடம் பிடித்து உள்ளார் நடிகை. துப்பாக்கியை ஒப்படைக்குமாறு கூறியும் மறுத்த நிலையில் காவல்துறையினர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வேனசா மார்க்கஸ் உயிரிழந்தார். பின்னர் அருகில் வந்து  சோதனை செய்த போது தான்  தெரிய வந்தது வேனசா வைத்திருந்தது பொம்மைத் துப்பாக்கி என்று...

நடிகை இறக்கும் சில நிமிடத்திற்கு முன் சுமார் ஒன்றரை மணி நேரம் நல மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.