இயக்குநர் மணிரத்னத்தின் அஞ்சலி படத்தில் நடித்தவர் காயத்ரி ராவ் படத்தி நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேதம்மாள் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் காயத்ரி ராவ் கொடுத்த புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: எல்லை மீறும் மீரா மிதுன்... இதுதான் முழுநேர வேலையேவா..? தலையில் அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்...!

அதில், காயத்ரி ராவ் கடந்த 9ம் தேதி ஆன்லனில் பீட்சா  ஆர்டர் செய்துள்ளார். அந்த பீட்சாவை பரமேஸ்வரன் என்ற டெலிவரி பாய் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அந்த ஊழியர் பீட்சாவை எடுத்துக்கொண்டு கிளம்பியதில் இருந்து காயத்ரி ராவிற்கு தொடர்ந்து போன் செய்து பேசிவந்துள்ளார். இதனால் கடுப்பான நடிகை காயத்ரி ராவ், பரமேஸ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் வீட்டிற்கு பீட்சா டெலிவரி செய்ய வந்த பரமேஸ்வரனுடன் காயத்ரி ராவ், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் தான் காயத்ரி ராவிற்கு பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது. பீட்சாவைடெலிவரி செய்துவிட்டு பரமேஸ்வரன் சென்ற நாட்களில் இருந்தே, காயத்ரிக்கு பல எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. 

இதையும் படிங்க: ஜெயம் ரவியை கோமாவில் படுக்கவச்சது போதாதா..? பிகினியில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை அட்டாக் செய்யும் சம்யுக்தா..!

அதிலிருந்து பேசியவர்கள் காயத்ரியிடம் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. வாட்ஸ் அப்பிலும் சிலர் ஆபாச மெசெஜ்களை அனுப்பியுள்ளனர். இதனால் பயந்து போன காயத்ரி ராவ், இதனால் அதிர்ச்சியான காயத்திரி ராவ் சக்திவேல், சுந்தரம், மகேஸ்வரன் ஆகிய மூன்று பேருடைய செல்போன் எண்ணுடன்  தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: "இருட்டில்" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...!

அதன்பேரில் அந்த மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், பீட்சா டெலிவரி பாயான பரமேஸ்வரன் ஆபாச வீடியோக்களை பகிரும் வாட்ஸ் அப் குரூப்பில் காயத்ரி ராவின் எண்ணை ஐட்டம் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அதுமட்டும் போதாது என்று ஆபாச வலைத்தளத்திலும் அந்த எண்ணை பதிவிட்டுள்ளார். இதையடுத்து பரமேஸ்வரனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.