கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு,  நடிகைகள் சிலருக்கு எதற்கு உதவுகிறதோ... இல்லையோ... இந்த ஓய்வை பயன்படுத்தி கொண்டு, விதவிதமான ஆடைகள் அணிந்து, புகைப்படம் வெளியிட உதவியுள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே, பில்லோ சேலஞ்சு மூலம்... தலையணையை மட்டுமே உடலில் கட்டி கொண்டு, விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த, நடிகை பாயல் ராஜ்புட் தற்போது நியூஸ் பேப்பரால் செய்த உடையை அணிந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த கவர்ச்சி அதகளத்திற்கு, ஒரு தரப்பு ரசிகர்கள் பாயல் ராஜ்புட் அழகை ரசித்தவாறு, ஆதரவு கொடுத்த போதிலும், மற்றொரு தரப்பினர் இதெல்லாம் ஒரு உடையா? இந்த நேரத்தில் இப்படி செய்வது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் சிலர் வழம்போல் எதிர்ப்பு தெரிவித்து விளாசி வருகிறார்கள்.

எனினுனும் இந்த நாயகி அணிந்துள்ள, காகித உடை தொடர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது. ஊரடங்கில் ஓயாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பை பிடிக்க அஸ்திவாரம் போடுகிறா பாயல் என்கிற சந்தேகத்தையும் வரவைத்துள்ளது..