பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் நடிக்க  பயந்த காஜல் அகர்வால்!( வீடியோ)

parries parries press meet
First Published Sep 26, 2017, 4:43 PM IST | Last Updated Sep 19, 2018, 3:17 AM IST



பாலிவுட்டில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் (குயின்).  இந்தப் படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இந்தப் படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். கங்கனா நடித்த அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் துவக்க விழாவில் பேசிய இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இந்தப் படத்தின் கதை மிகவும் அருமையான ஒன்று.  இந்தப் படத்தில் நடிக்க வைக்க  பொருத்தமான கதாநாயகி யார்  என நாங்கள்  தேடும் போது கிடைத்தவர் தான்  காஜல். இப்போது அவர்  இந்தப் படத்தில் நடிக்கப்போவது தன்னுடைய முதல் படம் போல் உள்ளது என்று கூறினார். அதுவே தனக்கு வியப்பாக இருந்தது என்று தெரிவித்தார்.

பின் இந்தப் படத்தில் நடிப்பது குறித்துப் பேசிய காஜல், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த  இயக்குனர் ரமேஷ் அரவிந்துக்கு நன்றி தெரிவிதார்.

பாரிஸ் பாரிஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு வீடியோ...

Video Top Stories