பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவ வீரர்களைக் கேவலப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடுவிரலைக் காட்டி போஸ் கொடுத்த கவர்ச்சி நடிகை வீணா மாலிக்குக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

 பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டு இந்தி, கன்னட படங்களில் நடித்தவர் வீணா மாலிக். இந்தி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். அவ்வப்போது ஆபாச படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். நிர்வாணப்போஸ்கள் கொடுப்பதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்.

இரு தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஊடுருவி நாசவேலை செய்ய முயன்ற பாகிஸ்தான் சிறப்பு படையை சேர்ந்த 7 பேரை நம் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அடுத்து வெள்ளைக் கொடியை ஏந்தி வந்து அவர்களின் உடல்களை எடுத்துச் செல்லுமாறு இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் இந்திய ராணுவத்தை விமர்சித்து டுவீட் போட்டுள்ளார். இந்திய ராணுவத்திற்கு ஆபாச சைகை காட்டி புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கூடவே இந்திய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் என்றும் கமெண்ட் போட்டிருந்தார். அதை பார்த்த இந்திய ரசிகர்கள் கொந்தளித்து வீணா மாலிக்கை விளாசி தள்ளியுள்ளனர்.

வீணா மாலிக்கின் படத்துக்கு கீழ் ‘நீங்கள் புகைப்படத்தில் காட்டியுள்ளதை தான் இந்திய ராணுவம் உங்களின் சிறப்பு படையினருக்கு செய்துள்ளது. பட்டாலும் திருந்தாதவர்கள் நீங்கள். உங்களுக்கு வேறு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது’ என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.வீணா மாலிக் பிக்பாஸ் வீட்டில் நடிகர் அஷ்மித் படேலுடன் நெருங்கி பழகியதை நினைவு கூர்ந்தும், பத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்ததையும் விமர்சித்துள்ளனர். ‘உங்களிடம் இருந்து நாகரீகத்தை எதிர்பார்க்க முடியாது. பணம் சம்பாதிக்கும் ஆசையில் மீண்டும் பாலிவுட் பக்கம் வந்தா அப்புறம் நடக்குறதே வேற’என்ற எச்சரிக்கைகளும் கமெண்டுகளில் குவிந்து வருகின்றன.