கோலிவுட் திரையுலகில், மிக விரைவில் அபரிவிதமான வளர்ச்சியை எட்டிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பா.ரஞ்சித். தற்போது வளர்ந்து வரும் அறிமுக இயக்குனர்கள் பலருக்கு இவர் ஒரு ரோல் மாடல் என்றும் கூறலாம். 

இயக்குனராக சாதிக்க, வாய்ப்பும் திறமையும் இருந்தால் போதும். உலகமே உன்னை திரும்பி பார்க்கும் வகையால் உன்னால் ஆக முடியும் என நிரூபித்து காட்டியவர்.

அட்டக்கத்தி, திரைப்படம் மூலம் ஆரம்பமான இவரின் இயக்குனர் பயணம், மெட்ராஸ், கபாலி, காலா என தாண்டி தற்போது தாயாரிப்பாளராக இவரை மாற்றி இருக்கிறது. 

இவருடைய தயாரிப்பில் முதல் முதலில் வெளியாக உள்ள திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. இந்த படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாகவும், ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை வரும் 28      தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர் . மேலும் பாடல்க வரும் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில். சந்தோஷ் நாராயணன் இசையில், ஸ்ரீதர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்சன் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகது.