கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் 'ஓவியா'. இந்த திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் அவர்கள் வெளியிட்டார்.

புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும்  இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் -  சூர்யா நாராயணன். 

காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் 'ஓவியா'வாக நடிக்கிறார்.

இந்த  'ஓவியா'    திரைப்படம் அனைத்து  வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.  

இந்த திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வை மற்றும் போஸ்ட் புரெடக்ஷன் வேலைகளை தமிழகத்தை சேர்ந்த  TS MEDIA WORKS நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

ஆனால் ரசிகர்கள் பலர் இது 'ஓவியா' படத்தின் பஸ்ட் என கூறியதும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஓவியா நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் என நினைத்த போது அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. என்ன பண்றது போஸ் படத்தோடு பேர் 'ஓவியா'ன்னு வச்சிடாங்க அப்ப படத்தோட பெயரை தானே போட முடியும்.