Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் உடுமலை கவுசல்யாவின் காதல் கதை..!

உடுமலை கவுசல்யாவின் ஆவணப்படமான ஜனனி ஜூலியட் 92 வது சர்வதேச பட விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 

oscars documentary exploring caste and love has gowsalya centre
Author
Tamil Nadu, First Published Sep 25, 2019, 6:19 PM IST

பங்கஜ் ரிஷி குமார் இயக்கியுள்ள உடுமலை கவுசல்யாவின் ஆவணப்படம் 92 வது சர்வதேச பட விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளது. 

oscars documentary exploring caste and love has gowsalya centre

மூன்று சம்பவங்களை மையமாகக் கொண்டது ஜனனி ஜூயட் ஆவணப்படம். கவுமரனே வளவனே இயக்கிய கவுசல்யா இடம்பெற்ற பகுதிகளை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கவுசல்யா சந்தித்த சாதிய ஆணப்படுகொலை குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2016ல் மாற்று ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட சங்கரை கவுசல்யாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்தனர். அந்தக் கொலையை எதிர்த்து போராடி இளம்பெண்ணாக உரியவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தார் உடுமலை கவுசல்யா. அடுத்து ஆணவப் படுகொலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கவுசல்யா. 

oscars documentary exploring caste and love has gowsalya centre

இதனிடையே கவுசல்யாவை சந்தித்த கவுமரனே, அவரது காதல், கொடூரமாக கணவனை பறிகொடுத்தது. காதலுக்குள்ள ஜாதிய எதிர்ப்பு, மாற்று ஜாதியினரை காதலிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றை கவுசல்யாவின் குரலில் பதிவு செய்துள்ளனர். இந்த ஆவணப்படத்திற்கு ஜனனியின்  ஜூலியட் எனப் பெயரிட்டுள்ளனர்.  இந்த ஆவணப்படம் சர்வதேச விருதுகளுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்தப்படம் கவுசல்யாவின் வாழ்க்கை அனுபவைத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios