நடிகர் அஜித் பற்றி முதியவர் ஒருவர் பெருமை பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகைர் அஜித் குமார் அப்பா-மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அஜித் பற்றி முதியவர் ஒருவர் பெருமை பேசும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வருகிறது. வீடியோவில் அந்த முதியவர், தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளமும் கொடுத்து, வீடும் கட்டி கொடுத்த தெய்வம் அஜித் என்கிறார். தான் செத்தாலும் ஏழைங்க சாகக் கூடாதுன்னு நினைக்குற தெய்வம்... 
என்றும் " விவேகம்"  படத்தில் அஜித் பேசும் வர்றேன்மா என்ற வசனத்தை பேசி, நடித்தும் காட்டியுள்ளார். 
இந்த வீடியோ அஜித் ரசிகர்கள் மற்றும் இன்றி அனைவரிடத்திலும், வைரலாக பரவி வருகிறது.