Asianet News TamilAsianet News Tamil

திரில்லர் கதையில்... சிபிக்கு ஜோடியாக நடிக்கும் நிக்கிலா விமல்...

nikila vimal act for sibiraj film
nikila vimal-act-for-sibiraj-film
Author
First Published Mar 14, 2017, 6:35 PM IST


வெற்றி வேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகை நிக்கிலா விமல்...

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும்  'கிடாரி'  படத்தில் சசிக்குமாருக்கே ஜோடியாக நடித்தார் இந்த படத்தின் மூலம் தன்னுடைய  யதார்த்தமான நடிப்பாலும், மனதை கவரும் பாவனைகளாலும் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் உள்ளங்களையும்  கொள்ளை அடித்துச் சென்றார்  நிக்கிலா விமல்.

இந்நிலையில் இயக்குனர் வினோத் என்பவர் தற்போது இயக்கவுள்ள படத்தில்  சிபிராஜ்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கும் இந்த படத்தை 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய்.கே.செல்லையா தயாரிக்கிறார். 

இந்த திரைப்படத்தில்  முதல் முறையாக நகர கலாச்சாரத்தில் வாழ கூடிய பெண் கதாபாத்திரத்தில் நிக்கிலா விமல் நடிக்கிறார்... இது குறித்து அவர் கூறுகையில்... ஒரே நிறுவனத்தில் பணிபுரியும்  அனிமேஷன் கலைஞர்களாக  நானும், சிபிராஜும் இந்த படத்தில் நடித்து இருக்கின்றோம் என்றும்.

 சமூதாய பிரச்சனையை  மையமாக கொண்டு உருவாகும் இந்த திரைப்படத்தில் என்னுடைய பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது தனக்கு  பெருமையாக இருக்கின்றது" என்று உற்சாகமாக கூறுகிறார் நிக்கிலா விமல். 

மேலும் விரைவில் இந்த படக்குழுவினர் தங்கள் படத்தின் படப்பிடிப்பை காஷ்மீரிலும், அதனை தொடர்ந்து பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios