பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுக்கும் நடந்த நிச்சயதார்த்தம் இந்திய திரையுலகிலும் அமெரிக்காவிலும் பரபரப்பான பேச்சாக உள்ளது.

பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. நிக் ஜோனாசுக்கு 25 வயது மட்டுமே ஆகிறது. இருப்பினும் இவர்கள் இருவரும் திடீர் என காதலில் விழுந்ததால், இவர்களுடைய திருமண ஏற்படும் படு வேகமாகவே நடைபெறுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தத்தின் போது, பிரியங்கா சோப்ராவுக்கு நிக் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை அணிவித்தார். 

மேலும் நிக் - ஜோனாஸ் பெற்றோர் தங்களுடைய வருங்கால மருமகளான ப்ரியங்கா சோப்ராவுக்கு, ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர பிரேஸ்லெட்டை பரிசாக அளித்தனர். இந்த தகவல் காட்டு தீ போல் பரவியது.

தற்போது இந்த திருமண நிச்சயதார்த்தம் குறித்து, நிக் ஜோனாஸ்ஸின் முன்னால் காதலி கூறுகையில். எட்டு வருடங்களாக காதலித்து வந்த எங்களுக்குள் சிறு மனகசப்பு ஏற்ப்பட்டது. இதனை நானே அவரிடம் பேசி சமாதானப்படுத்த முயன்ற போது, என் வாழ்க்கையில் நுழைந்து விட்டார் பிரியங்கா. 

இந்த நிச்சயதார்த்தம் என் இதயத்தை உடைத்து விட்டது என கதறி அழுதுள்ளார். மேலும் தன்னுடைய காதலனுக்கும், தனக்கும் சிறு பிரச்சனை மட்டுமே இருந்தது. அவர் என்னை விட்டு செல்வார் என்று நினைத்து கூட பார்க்க வில்லை என கூறியுள்ளார்.