‘நீங்க நீங்களா இருக்கிறவரைக்கும் எங்கள நாயா நினக்கிறவரைக்கும் இந்த நிலைமை மாறாது’ பரியேறும் பெருமாள் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் இந்த  வசனம் சாதியத்துக்கு எதிரானதாக எவ்வளவு பொருத்தமானதோ அதைவிடவும் நெருக்கமாக பொருந்துகிறது சிறு படங்களுக்கு  தியேட்டர் கிடைக்காத சமாச்சாரத்திற்கு.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு சென்னையில் 160 காட்சிகள் கிடைத்த நேரத்தில் ‘பரியேறும் பெருமாளுக்கு வெறும் 30 காட்சிகளே கிடைத்தன. பெருமாளுக்கு ஊடகங்கள் பெருசாய் எழுதித்தள்ளியபிறகும் அந்நிலை இன்று திங்கள் வரை மாறவில்லை.

பா.ரஞ்சித்தும் அவரது கூட்டாளிகளும் ’அதிக தியேட்டர்களும் அதிக காட்சிகளும் வேண்டும்’ என்று முகநூலிலும் ட்விட்டரிலும் கூச்சலிட்டும் தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து நோ ரெஸ்பான்ஸ்.

பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ கபாலி’ காலா’ படங்களின் போது சிறு படங்களுக்கு இதை விட குறைவான தியேட்டர்கள் தந்து காயடித்தார்கள். இப்போது அதே சம்பவம் அவர்களுக்கு நடக்கும்போது மட்டும் வலிக்கிறதா? போங்க பாஸ் அடுத்த ரஜினி படத்துக்கு அட்வான்ஸ் வாங்குற வழியப்பாருங்க’என்று முகநூல் வட்டாரங்களில் நக்கலடிக்கின்றன அவரது எதிர்கோஷ்டிகள்.