தற்போது டிஜிட்டல் யுகத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சுற்றி வருபவர் யார் என்று கேட்டால் நம்ம மீரா மிதுனாக தான் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர்.  தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார்.

ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை
வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

முன்னழகு, பின்னழகு, டாப்லெஸ் என்று திகட்ட, திகட்ட கவர்ச்சி காட்டினாலும் மீரா மிதுனை நெட்டிசன்கள் கலாய்க்கவும், திட்டவும் மட்டுமே செய்கின்றனர். மீராவின் ஹாட் போட்டோஸுக்கு வரும் லைக்குகளை விட கேவலமான கமெண்ட்ஸ்களே அதிகம். அப்படியாவது அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிடுவதை நிறுத்துவர் என்று பார்த்தால், அவர் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

இதையும் படிங்க: “வாத்திங் கம்மிங்” பாட்டுக்கு மரண மாஸ் டான்ஸ்... வேற லெவலில் வைரலாகும் மைனா நந்தினி வெர்ஷன்...!

இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நிலையில், மீரா மிதுனும் தன்னுடைய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். சாதாரண நாட்களை விட இப்போது மீரா மிதுன் பதிவிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓவர் தாராளம் ரகத்தில் உள்ளன. 

இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்!

“ஐ அம் ஃபாலிங் இன் லவ்” என்ற ஹேஷ்டேக்குடன் குட்டை பனியனில் தொப்புள் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். “எந்த இளிச்சவாயன் மாட்டினானோ தெரியலையே”, ”பாவம் யார் பொத்த பிள்ளையோ அவன்” என்று மீரா மிதுனை சகட்டு மேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.