இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த குஷ்பு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழலும் குஷ்பு, சோசியல் மீடியாவிலும் செம்ம ஆக்டீவாக இருக்கிறார். சமூக பிரச்சனைகள் பலவற்றிற்கும் டுவிட்டரில் கருத்து கூறி வந்த குஷ்பு, தற்போது சென்னை வெயில் குறித்து பதிவிட்ட ட்வீட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: "மாஸ்டர்" படத்தின் ட்ராக் லிஸ்ட் லீக்கானது... அதிர்ச்சியில் விஜய் படக்குழு..!

குஷ்புவின் டுவிட்டரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர். என்னமோ பஸ்ல போறா மாதிரி ட்வீட் பண்றீங்க... ஏசி கார்ல தானே போறீங்க... உங்களுக்கு என்ன கவலை என கேட்டிக்கிறார்கள். அதேபோல, ஆமா அதனால் தான் நான் வத்தல், வடகம் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன் என குடும்ப தலைவி பதிலளித்துள்ளார். 

மேலும் சிலரோ சென்னையில் மட்டுமல்ல, ஓவர் ஆல் தமிழ்நாடே தீயாய் தான் இருக்கு ... செம்ம ஹாட் என கமெண்ட் செய்துள்ளனர். நிறைய ஜூஸ், இளநீர் குடிங்க, ஸ்விமிங் பண்ணுங்க என அட்வைஸ் செய்துள்ளார் ஒரு அறிவாளி நெட்டிசன். அதற்கு அடுத்தடுத்தும் ஒரே அட்வைஸ் மழை தான்.

இதையும் படிங்க: நடிகை குஷ்புவின் மகளா இது?.... உடல் எடையை குறைத்து ஓவர் ஸ்லிம்மான போட்டோ...!

இப்படி தான் போடும் ட்வீட்டுகளுக்கு எல்லாம், சம்மனே இல்லாமல் ஆஜராகி கரைச்சல் கொடுத்ததால் தான்,  ஏற்கனவே ஒரு முறை குஷ்பு தனது டுவிட்டர் அக்கவுண்ட்டை குளோஸ் செய்தார். சரி திருந்தி இருப்பாங்கன்னு நம்பி, திரும்பி வந்த குஷ்புவை இப்படி மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.