ஜல்லிக்கட்டு போராட்டத்தில், காது வலிக்கும் அளவிற்கு காட்டு கத்து கத்தி, பல ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் தான் ஜெயிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏனோ... கிடைத்தது ஏமாற்றமே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேமரா இருப்பதை மறந்து, சில விஷயங்களை செய்ததால் சர்ச்சையில் சிக்கினார்.ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் அனைவரையும் கடுப்பாக்கியது. அதனால் பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்களிடம் ஜூலிக்கு கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சியது. அப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மெயின் கன்டன்ட்டாக இருந்தவர் ஜூலி தான். 

அவ்வப்போது சோசியல் மீடியாவில் போட்டோ வெளியிட்டு நானும் இருக்கேன்... நானும் இருக்கேன் என காட்டிக் கொண்டு வருகிறார். என்னதான் விதவிதமாக போட்டோ போட்டாலும் ஜூலிக்கு கிடைப்பது என்னவோ அவமானம் தான். அவரது போட்டோவை பார்த்தாலே நெட்டிசன்கள் கழுவி ஊத்த ஆரம்பித்துவிடுகின்றனர். 

காணும் பொங்கலான இன்று ஜூலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோஷம் போடுவது போன்ர அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் உங்களை வீர தமிழ்ச்சி என நம்பி ஏமாந்த நாள் இன்று என சகட்டு மேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

உங்களை தமிழ் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம் என கண்டபடி திட்டி கமெண்ட் செய்துள்ளனர். அதற்கு ஜூலி நண்பா உண்மை ஒருநாள் தெரியும் அப்போது நீங்கள் இதை கூறமாட்டீர்கள் என வெட்கமே இல்லாமல் விளக்கம் அளித்துள்ளார்.