ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள படம் தர்பார். பொங்கல் விருந்தாக வரும் 9ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையில் வெளியான தர்பார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டையக் கிளப்பி வருகிறது. 

தெலுங்கி தர்பார் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த் ரசிகர்களிடையே தெலுங்கில் உரையாற்றினார். அப்போது 70 வயதிலும் எப்படி இவ்வளவு எனர்ஜியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் என்ற ரகசியத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டுடைத்தார். 

தனது ஸ்டைலில், குறைவாக ஆசைப்படுங்கள், குறைவாக சாப்பிடுங்கள், குறைவாக தூங்குங்கள், குறைவாக பேசுங்கள், இதை கடைப்பிடித்தாலே தானாக எனர்ஜி வரும் என ஆலோசனை கூறினார். 

சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் ரஜினியின் இந்த பேச்சை கேட்கும் நெட்டிசன்கள். ஆமா... இவர் மட்டும் கோடி, கோடியா சம்பளம் வாங்குவாரு, இவர் பட டிக்கெட் மட்டும் ஆயிரக்கணக்கில் விலை போகும் அதை பத்தியெல்லாம் ஒண்ணுமே பேசாத தலைவர், நம்மள மட்டும் கொஞ்சமா ஆசைப்பட சொல்லுறாருன்னு விமர்சித்து வருகின்றனர்.