Asianet News TamilAsianet News Tamil

ஊரடங்கிலும் சோகம்... விஜய் சேதுபதியை கலங்கடித்த திடீர் மரணம்..!

நெல்லை பாரதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு உதவித்தொகையும் வழங்கி விட்டு கண்கலங்கி சென்றார் விஜய் சேதுபதி. 

Nellai Bharathi's death as journalist disturbs Vijay Sethupathi
Author
Tamil Nadu, First Published Apr 3, 2020, 5:03 PM IST

தமிழ் சினிமாவின் தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கவிஞராகவும்வலம் வந்தவர் நெல்லை பாரதி திடீர் உடலநலக் குறைவால் காலமானார். 

இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கிலும் நடிகர் விஜய் சேதுபதி நெல்லை பாரதியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். தினகரன் மாணவப்பத்திரிக்கையாளராக எழுத்துலகில் அடியெடுத்து வைத்தவர் நெல்லை பாரதி. நெல்லை சீமையில் இருந்து வந்தவர். இயற்பெயர் வேல்முருகன். அடுத்து டி. ராஜேந்தரின் உஷா பத்திரிகையில் பணியாற்றி, தினமலர், குங்குமம்,வண்ணத்திரை சினிமா இதழின் ஆசிரியராக உயர்ந்தவர். Nellai Bharathi's death as journalist disturbs Vijay Sethupathi

பாட்டுச்சாலை உள்ளிட பல நூல்களை எழுதியவர், சினிமா பத்திரிக்கையாளராக இயங்கி வந்தாலும், இலக்கிய உலகில் சஞ்சரித்தவர். சினேகாவின் காதலர்கள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதினாலும் ’ரெட்ட ரெட்ட மனசே ரெண்டுங்கெட்ட வயசே..’ பாடல் இவருக்கு பாடலாசிரியராகவும் முகவரி தந்தது. 

திமுகவுக்காக பல பிரச்சார பாடல்களை எழுதி இருக்கிறார். குங்குமம் இதழில் வெளியான வாச்சாத்தி கட்டுரையை கண்ட டாக்டர் கலைஞர் அவர்களால் நேரிடையாக அழைக்கப்பட்டு வாழ்த்து பெற்றவர் நெல்லைபாரதி. இவரது இறுதி காலங்களில் நடிகர் விவேக்கும், நடிகர் விஜய் சேதுபதியும் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். நெல்லை பாரதி மீது மிகுந்த பற்றுக்கொண்டவர் விஜய் சேதுபதி. இறுதியாக விஜயசேதுபதிக்கு வீடியோ மலர் தயாரித்து வந்தார் நெல்லை பாரதி.Nellai Bharathi's death as journalist disturbs Vijay Sethupathi

இந்நிலையில் நெல்லை பாரதி இறப்பை அறிந்து ஊரடங்கு உத்தரவிலும், நெல்லை பாரதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு உதவித்தொகையும் வழங்கி விட்டு கண்கலங்கி சென்றார் விஜய் சேதுபதி. நெல்லை பாரதியில் உடல் போரூர்  மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios