தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என பார்க்கப்படும் நயந்தாரா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'கோலமாவு கோகிலா'. கடந்த 17 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், 2 வாரங்களை கடந்தும் அனைத்து திரையரங்கிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. 

கடந்த வாரம் மூன்று பெரிய படங்கள் வெளியான போதிலும், கோலமாவு கோகிலாவுக்கு மவுசு குறையவில்லை என்று கூறுகிறார்கள் சென்னை திரையரங்க உரிமையாளர்கள்.

கடந்த வார இறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 19 திரையரங்குகளில் 209 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,03,87,562 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் இரண்டாவது வாரத்திலும் 90% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கோகோ படம் ரிலீஸ் ஆன ஆகஸ்ட் 17 முதல் நேற்று தற்போது வரை சென்னையில் மட்டும் ரூ.3,88,86,796 வசூல் செய்துள்ளது. இன்றும் ஒரு சில நாட்களில் இந்த படத்தில் வசூல் சென்னையில் மட்டும் ரூ.4 கோடியை தொட்டுவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக நயன்தாராவின் 'கோகோ' திரைப்படம் இருப்பதாகவும். அடுத்ததாக 'இமைக்கா நொடிகள்' படத்திற்கு எதிர்ப்பார்போடு காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர் ரசிகர்கள்.