நடிகை நயன்தாரா நடிப்பில் 2019  ஆம் ஆண்டு, விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், ஐரா , மற்றும் கொலையுதிர் காலம் என நான்கு படங்கள் வெளியானது. இவற்றில், நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடித்த விஸ்வாசம் திரைப்படம் மட்டுமே சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது.

எனினும், கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் இவர் தான் முன்னணி தமிழ் நடிகை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நடிகையாக உள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா, நடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்திற்கு இப்போதில் இருந்ததே செம்ம வைட்டிங்கில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இது ஒரு புறம் இருக்க, வழக்கம் போல் நடிகை நயன்தாரா தன்னுடைய காதலனுடன் இந்த வருட புத்தாண்டை கவர்ச்சிகரமாக கொண்டாட துவங்கிவிட்டார். தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறி, ஜிகு ஜிகு என துண்டு போல் இருக்கும் ஒரு கவர்ச்சி உடையில் வாழ்த்து சொல்லி அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் அனைவராலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And the adventure begins yet again ✨ Happy 2020🙆🏼‍♀️❤️💫

A post shared by nayanthara🔵 (@nayantharaaa) on Dec 31, 2019 at 7:36pm PST