எப்படிப்பட்ட கதாப்பாத்திரம் கொடுத்தாலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன்ஷா. இவர் ஏற்கனவே நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'ஹே ராம்' திரைப்படத்தில் மகாத்மா காந்தி வேடத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர். 

இந்நிலையில் தற்போது 18 வருடங்களுக்கு பின் மீண்டும் இவரை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பிரகாஷ் தேவராஜ் சமீபத்தில், மும்பையில் இவரை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும். நஸ்ருதீன்ஷாவுக்கு கதை மிகவும் பிடித்து விட்டதால், இந்த படத்தில் நடிக்க அவர் ஒற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, நஸ்ருதீன்ஷா நடிக்க உள்ள தமிழ் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.