கோலாகலமாக நடந்து முடிந்த மச்சான்ஸ் 'நமிதா' திருமணம்... வீடியோ...!

namitha marriage video
First Published Nov 24, 2017, 1:14 PM IST | Last Updated Sep 19, 2018, 3:18 AM IST



தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நமிதா, குஜராத்தை சேர்ந்த இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள்' அண்ணா ' திரைபடத்தின் மூலம் அறிமுகம் கொடுத்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சரத்குமாருடன் இவர் நடித்த ஏய் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இதனால் இவருக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக வாய்புகள் கிடைத்தன, அஜித்துடன் பில்லா, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

உடல் எடை காரணமாக சில காலம் குறிப்பிட்ட தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், சின்னத்திரை நடன நிகழ்ச்சி நடுவர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஒரு சில சர்ச்சைகளுக்கு ஆளானார்.

இந்நிலையில் கடந்த மாதம் இவர் தயாரிப்பாளரும், நடிகருமான 'வீரா' என்கிற வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார். அதன்படி நமிதாவின் திருமணம் இன்று திருப்பதியில் உள்ள இஸ்கான் 'கிருஷ்ணர்  கோவிலில்' கோலாகலமாக வீராவின் குடும்ப வழக்கப்படி நடந்தது.

இந்தத் திருமணத்தில் இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

நமிதாவின் திருமண வீடியோ...

 

Video Top Stories