துப்பறிவாளன் திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கும் திரைப்படம் 'சைக்கோ'. இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 7 ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தில் இயக்குனர் ராம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலினை ராம் அவர்களின் மனைவி சுமதி ராம் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இயக்குனர் ராமும், மிஸ்கினும் இணைந்து நடித்த சவரகத்தி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பினை பெற்றது. இந்நிலையில் சைக்கோ திரைப்படத்திலும் இருவரும் இணையவிருக்கின்றனர். 

இப்படத்தில் நடிகை அதிதிராவ் ஹைதாரி  கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் மிஷ்கினும், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும் இப்படத்தில் முதன்முறையாக சேர்ந்து பணியாற்றவுள்ளனர். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் நேற்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் 'சைக்கோ' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் 7 ம் தேதி வெளியாகுமென தெரிவித்துள்ளார்.