’2.0’ சான்ஸே இல்லைங்க.... மேக் அப்புல எப்பிடியெல்லாம் மிரட்டுறாங்க... வீடியோ!!

ஒரு நாளைக்கு மேக் அப் போட மூன்றுமணி நேரம் முதல் நான்கு மணிநேரம், அதைக் கலைக்க ஒரு மணிநேரம் என்று இந்தப் படத்துக்காக நான் பட்டபாடு சொல்லிமாளாது. ஆனால் படம் முடிந்து விஷுவல்களைப் பார்த்தபிறகு அந்தக் களைபெல்லாம் பறந்தோடிவிட்டது. இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் நான் கற்றுகொண்டது ஏராளம்.

First Published Nov 17, 2018, 9:53 AM IST | Last Updated Nov 17, 2018, 9:53 AM IST

''நான் சினிமாவுக்கு வந்து 28 வருடங்களாகின்றன. இத்தனை வருடங்களில் நடித்தபோது எடுத்த மொத்த நேரத்தையும் விட ‘2.0’ என்ற இந்த ஒரு படத்துக்கு எடுத்த நேரம் அதிகம்.

ஒரு நாளைக்கு மேக் அப் போட மூன்றுமணி நேரம் முதல் நான்கு மணிநேரம், அதைக் கலைக்க ஒரு மணிநேரம் என்று இந்தப் படத்துக்காக நான் பட்டபாடு சொல்லிமாளாது. ஆனால் படம் முடிந்து விஷுவல்களைப் பார்த்தபிறகு அந்தக் களைபெல்லாம் பறந்தோடிவிட்டது. இந்தப்படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரிடம் நான் கற்றுகொண்டது ஏராளம். 

ஷங்கரை ஒரு இயக்குநர் என்பதை விட அவர் ஒரு சயிண்டிஸ்ட் என்றே சொல்வேன் ‘ என்றார் அக்‌ஷய்குமார் '2.0’ ஆடியோ வெளியீட்டின்போது. அக்‌ஷய் சொல்லும்போதே அவருக்கு மேக் அப் போடப்பட்ட காட்சிகளைப் பார்க்கும் ஆர்வம் வருகிறதல்லவா... இதோ இந்த வீடியோவைப் பாருங்கள்.. மிரட்டல் என்றால் அது இதுதான்.