Asianet News TamilAsianet News Tamil

வீடு தேடி சென்ற ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த மும்தாஜ்! பொது மேடையில் அரங்கேறிய சம்பவம்!

90 களில், பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகை என பெயர்பெற்றவர். நடிகர் விஜயுடன் இவர் 'குஷி' படத்தில் ஆடிய 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் இன்று வரை மிகவும் பிரபலம்.

mumtaj give the shock for fans
Author
Chennai, First Published Sep 27, 2018, 12:49 PM IST

90 களில், பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகை என பெயர்பெற்றவர். நடிகர் விஜயுடன் இவர் 'குஷி' படத்தில் ஆடிய 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் இன்று வரை மிகவும் பிரபலம்.

இவரை பலரும் கவர்ச்சி நடிகையாக பார்த்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருடைய எண்ணத்தையும் ஒரே அடியாக மற்றும் அளவிற்கு நடந்து கொண்டார் மும்தாஜ். உடுத்தும் உடைகள் பேசும் வார்த்தைகள் என அனைத்திலும் நிதானமும், பொறுமையும் காட்டியது...  உண்மையில் கவர்ச்சி நடிகை மும்தாஜா என பலரை யோசிக்க வைத்து விட்டது.

mumtaj give the shock for fans

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள மும்தாஜ், இனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட வேடங்களில் மற்றொரு ரவுண்டு வருவார் என பலர் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் மும்தாஜின் ரசிகர் ஓவருவர் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். முதலில் அவருக்கு மும்தாஜை பார்க்க முடியுமா என்கிற தயக்கமும் இருந்துள்ளது. எனினும் மும்தாஜை பார்க்க வேண்டும் என கூறியதும், உடனடியாக ரசிகரை சந்திக்க வந்தாராம் மும்தாஜ் . பின்னர் தன்னுடைய ரசிகருக்காக அவருடைய கையாலையே டீ போட்டு கொடுத்து அதிர்ச்சி கொடுத்தாராம்.

mumtaj give the shock for fans

இதுகுறித்து அந்த ரசிகர் கூறுகியில் பொதுவாக நடிகர்கள் வீட்டிற்கு சென்றால், அவர்களுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான் டீ, காபி, போட்டுத்தருவார்கள். ஆனால் மும்தாஜ் தனக்கு டீ போட்டு கொடுத்து அதிர்ச்சி கொடுத்தார் என சமீபத்தில், மும்தாஜ் ரசிகர்கள் ஏற்படு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அந்த ரசிகர் பொது மேடையில் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மும்தாஜ் கலந்து கொண்டு, அவர்களுடைய ரசிகர்களுடன் செலஃபீ எடுத்துக்கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios