கே.வி.ஆனந்த் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது படு வேகமாக நடந்து வருகிறது.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில் இந்த படத்தில் பிரதமர் வேடத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே சூர்யா படத்தில் மோகன் லால் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில், நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக, சூர்யா மோகன் லாலுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில், மோகன் லால், பிரதமராக நடிக்கும் கெட்டப்பில் உள்ளார், சூர்யாவும் பார்ப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிகிறார்.   ஆனால் இது குறித்து படக்குழுவினர் எந்த தகவலையும் கூறவில்லை.

சூர்யா, மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி, பொமன் இராஅனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.