இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர், நடிகை சோனாலி பிந்திரே. 

மேலும் இவர், தமிழில் நடிகர் குணால் நடிப்பில், வெளியான 'காதலர் தினம், அர்ஜுன் நடித்த 'கண்னோடு காண்பதெல்லாம் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.

தமிழ் மற்றும் இன்றி, பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். திருமணத்திற்கு பின் கணவர், குழந்தை என குடும்பத்தை கவனித்து கொண்டு வந்த இவர் , கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ட்விட்டர் மூலம் ரசிகர்களிடம் தெரிவித்தார்.

சாதாரண முதுகு வலிக்காக சென்ற போது, இந்த அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறியிருந்தார் சோனாலி. மேலும் தற்போது புற்று நோய்க்கு அமெரிக்காவில்  சிகிச்சை எடுத்து வருகிறார், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு தான் நலமுடன் இருப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் பிரபல கட்சியின் எம்.எல்.ஏ ராம் கதம், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த   நடிகை சோனாலி பிந்த்ரே இறந்துவிட்டதாக  டிவிட் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இவரின் இந்த டுவிட்டிற்க்கு, ரசிகர்கள் மத்தியில் இருந்து, சோனாலியின் நண்பர்கள் மத்தியில் இருந்தும் மிகவும் மோசமான கருத்துக்கள் பறந்தன. இதை தொடர்ந்து  எம்.எல்.ஏ ராம் காதம் மீண்டும் டுவிட்டரில், போலியான செய்தியை நம்பி அவ்வாறு செய்துவிட்டேன் என தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். மேலும் சோனாலி பிந்த்ரே விரைவில் சிகிச்சை பெற்று நலமடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார். உயிரோடு இருக்கும் ஒருவரை இறந்து விட்டார் என பிரபல அரசியல் கட்சியின் எம்.எல்.ஏ.கூறியது சமூக வலைதளத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.