Asianet News TamilAsianet News Tamil

'மகளிர் தினம்' புடவை கட்டி... கிரிக்கெட் களத்தில் இறங்கி அடிக்கும் மித்தாலி ராஜ்! வைரலாகும் வீடியோ!

மகளிர் தினத்தை முன்னிட்டு , கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை காட்டியபடி கிரிக்கெட் விளையாடுவது போல், வெளியிட்டுள்ள வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என கேட்ட காலம் போய், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர்.
 
mithali raj playing cricket in saree viral video
Author
Chennai, First Published Mar 8, 2020, 10:00 AM IST

மகளிர் தினத்தை முன்னிட்டு , கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புடவை காட்டியபடி கிரிக்கெட் விளையாடுவது போல், வெளியிட்டுள்ள வீடியோ அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என கேட்ட காலம் போய், தற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து, ஆண்களுக்கு நிகராக வளர்ந்து வருகின்றனர்.

அதே போல், ஒரு சில விளையாட்டுகள் ஆண்கள் தான் விளையாட வேண்டுமா? என்கிற கேள்வி இருந்த நிலையில், விளையாட்டுகளும் அனைவருக்கும் சரிசமமாக பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது  பெண்களால் எதனையும் செய்ய முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக, மித்தாலி ராஜ் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

mithali raj playing cricket in saree viral video

1999-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார் மித்தாலி. மேலும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

குறிப்பாக, சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்துள்ளனர் மித்தாலி ராஜ். அதே போல் ஒரு நாள் போட்டியில் 6000 ரன்களைக் கடந்த வீராங்கனையும் இவரே... தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களை கடந்த ஓரே வீராங்கனை என கிரிக்கெட் வரலாற்றில் பல  சாதனைகளை செய்த பெண்ணாக பார்க்கப்படுகிறார்.

பெண்களை போற்றும் விதமாக இவர் வெளியிட்டுள்ள வீடியோ இதோ...

Follow Us:
Download App:
  • android
  • ios