அமைச்சர் மகனுக்கும் ப்ரேமம் மலர் டீச்சருக்கும் லவ் என புரளி!

தமிழ் பெண்ணான சாய் பல்லவி மலையாள திரையுலகில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். பின்னர் தெலுங்கு படத்தில் நடித்து அங்கும் பிரபலமானார். இதனையடுத்து இவர் தற்போது ஏ.எல் விஜய் இயக்கத்தில் தமிழில் “கரு” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவிக்கு திருமணமான ரவி தேஜாவுக்கும் தொடர்பு இருப்பதாக ஒரு தகவலை யாரோ கிளப்பி விட அது தீயாக பரவியது.

இது குறித்து பேசிய ரவி தேஜாவின் அப்பா சாய் பல்லவி வேகமாக வளர்ந்து வருவதால் அவர் மீது உள்ள பொறாமையால் இப்படியான வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.

இருவரும் ஒரு படத்திலும் சேர்ந்து நடிக்காத நிலையில் இந்த தகவல் தீயாக பரவியது. சாய் பல்லவியும், என் மகனும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆதாரம் இல்லாமல் இது போன்ற வதந்திகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
செக்ஸ் சில்மிஷம் செய்த நடிகருக்கு அப்பு விட்ட ஆப்தே....

தமிழ் படம் ஒன்றில் நடிக்கும்போது தன்னிடம் சில்மிஷம் செய்த பிரபல நடிகரை கன்னத்தில் அறைந்ததாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லை, படுக்கைக்கு அழைப்பது என்று பல நடிகைகள் பேசத் தயங்கும் விஷயங்கள் பற்றி துணிச்சலாக பேசி வருகிறார்.

இந்நிலையில் அவர் நடிகை நேஹா தூபியா நடத்தி வரும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தே கூறிய விஷயம் தான் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.  நான் தமிழ் படம் ஒன்றில் நடித்தபோது முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.

அப்போது பிரபலமான தென்னிந்திய நடிகர் ஒருவர் திடீர் என்று என் பாதங்களை வருடினார் என்றார் ராதிகா. அந்த நடிகரை நான் அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அவர் என் பாதங்களை வருடியதும் கோபத்தில் அவரை ஓங்கி அறைந்துவிட்டேன் என்று ராதிகா ஆப்தே தெரிவித்தார்.

ராதிகா ஆப்தேவிடம் வாலாட்டி சப்புன்னு அறை வாங்கிய அந்த தமிழ் பட நடிகர் யார் என்று ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ராதிகா இதுவரை 4 தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.