சமீபகாலமாக யூடியுபில் பிரபலமான பலர், வெள்ளித்திரையில் நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் அறிமுகமாகி வருகின்றனர்.  அந்த வகையில் கார்த்திக் வேணுகோபால், ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமான 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்தில் இயக்குனராக மாறினார்.

அதைத் தொடர்ந்து எருமை சாணி விஜய் , தற்போது அருள்நிதி நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளார். இவர் நட்பேதுணை போன்ற  ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து தற்போது  புட்சட்னி யூடியூப் சேனலில் அறிமுகம் ஆன ராஜ்மோகன் தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் பூஜையை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கி வைத்தார்.

இதுவரை படத்தின் டைட்டில் வைக்கப்படாத நிலையில், இந்த படத்தை  ராக்போர்ட் மற்றும் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் மைக் செட் யூட்யூப் சேனல் நடிகர் ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக, அசுரன் படத்தில் நடிகர் தனுஷிற்கு சிரியவயது காதலியாக வரும் அம்மு அபிராமி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.