நடிகையாவதற்கு சில வருடங்கள் சஜத்கானிடம் உதவியாளராக இருந்த அனுபவங்கள் குறித்து சலோனி ட்விட்டரில் எழுதிவருபவை இன்றைய தேதிக்கு பாலிவுட்டின் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.

மிகவும் ஆபாசமான செய்திகளைப் படிக்க விரும்பாதவர்கள் சலோனியின் இந்தப் பதிவுகளைப் படிப்பதை நிறுத்திவிட்டு, அடுத்த செய்திக்கு ஜம்ப் ஆகலாம்

‘நான் படம் இயக்குவது குறித்து தெரிந்து கொள்ள ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர விரும்பினேன். அப்போது நான் சஜித் கானிடம் வேலை கேட்டு நேர்காணலுக்கு சென்றேன். நேர்காணலில் நீ சுய இன்பம் காண்பாயா?, ஒரு வாரத்தில் எத்தனை முறை? யாராவது உனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன்.

நான் மார்பகத்தை பெரிதாக்க ஏதாவது செய்தேனா என்று கேட்டவர், செக்ஸ் பற்றி பேசினார். நேர்காணலின் முடிவில் எனக்கு அழுகை வந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. அவர் முன்பு அசவுகரியமாக உணர்ந்ததாலா என்று தெரியவில்லை. எனக்கு வேலை கிடைத்து விட்டது. முதலில் நான் வேலைக்கு சேர்ந்தபோது நீ உதவி இயக்குனர் இல்லை எனக்கு உதவியாளர் என்று சஜித் தெரிவித்தார்.

அவர் அப்போது ஒரு அழகான நடிகையை காதலித்தார். அந்த நடிகை பற்றி தப்புத் தப்பாக பேசுவார். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கூறுவார். அவரின் ஆணுறுப்பு மிகவும் பெரிது என்றும், அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம் என்றும் தெரிவித்தார். ஒரு நாள் காஸ்ட்யூம் டிரையலின்போது ஒரு பெண்ணை பாவாடையை தூக்கி தனது பின்னழகை காட்டுமாறு கூறினார். அந்த பெண் பயந்துவிட்டார். பின்னர் வேறு வழியில்லாமல் பாவாடையை தூக்கி காண்பித்தார்.

பின்னாடியும், முன்னாடியும் ஒன்னுமே இல்லாமல் நீ எல்லாம் நடிக்க வந்துவிட்டாயா என்று கேட்டார். உங்களுக்கு என்னுடன் உறவு கொள்ள வேண்டுமா, அதற்கு தான் இந்த பாடு படுத்துகிறீர்களா. உங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதன் பிறகு என்னை டார்ச்சர் செய்யக் கூடாது என்றேன். அதற்கு அவரோ எனக்கு அழகான காதலி இருக்கிறார். நீ என் கீப்பாக இருக்க வேண்டும். நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்றார்.

அவருடன் வந்து தங்குமாறு பலமுறை கேட்டுள்ளார். அவரின் ஆணுறுப்பை தொடுமாறும் கூறியுள்ளார். நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் என் கண் முன்பு பேண்ட்டை கழற்றி அவரின் ஆணுறுப்பை காட்டி உன்னை பார்த்தால் இதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றார். என் கையை பிடித்து அதன் மீது வைத்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரிடம் பணிபுரிவதை நிறுத்திவிட்டேன் என்று சலோனி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் இயக்குநர் என்ற போர்வையில் சஜத்கான் போன்ற எத்தனை மனநோயாளிகள் இருக்கிறார்களோ?