தல கடவுள் மாதிரி, கடவுள்னா அவர்தான் கடவுள்! புகழ்ந்து தள்ளும் மெர்சல் பட பாட்டி... வைரல் வீடியோ
தல அஜீத் தற்போது விசுவாசம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். வரும் பொங்கல் தினத்தன்று இந்த படம் ரிலீசாக இருப்பதால் விறுவிறுப்பாக முன்னேறி கொண்டிருக்கிறது விசுவாசம்.
தல அஜீத் தற்போது விசுவாசம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். வரும் பொங்கல் தினத்தன்று இந்த படம் ரிலீசாக இருப்பதால் விறுவிறுப்பாக முன்னேறி கொண்டிருக்கிறது விசுவாசம்.
மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் , அஜீத் , நயன்தாரா , இமான் என கலக்கல் கூட்டணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை அமோகமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அஜீத் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அவ்வப்போது விசுவாசம் அப்டேட்டுகளும் கலர்ஃபுல் ஆக வந்து கொண்டு இருக்கின்றன.
சமீபத்தில் தல அஜீத் பற்றி விஜய் படத்தில் நடித்திருந்த பாட்டி ஒருவர் புகழ்ந்து கூறி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. தளபதியின் மெர்சல் திரைப்படத்தில் சிட்டுக்குருவி சீனியம்மாள் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், இப்போது தல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இந்த வீடியோ காரணமாக அமைந்திருக்கிறது.
பொதுவாகவே சக நடிகர்களிடம் மிகவும் சகஜமாக பழகுபவர் அஜீத் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் அந்த குணத்தை பார்த்து தான் வியந்து பாராட்டி இருக்கிறார் இந்த பாட்டியம்மா. ஷூட்டிங்கின் போது தல எங்கள் கூட இருந்து தான் சாப்பிடுவார், சகஜமா பழகுவார். கேரவுனுக்குள்ள போக மாட்டார், என தெரிவித்ததுடன் தல தங்கமான மனுஷன், கடவுள் மாதிரி என்று புகழ்ந்து பேசி இருக்கிறார் சீனியம்மாள். இதனால் ஒரே சமயத்தில் இவர் தல மற்றும் தளபதி ரசிகரகள் மத்தியில் மிகப்பிரபலமாகி இருக்கிறார்.