திரையுலகில் சில்மிஷப் புகார் நாளுக்கு ஒன்றாவது கிளம்பாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். மீடு புகார்கள் வாட்டி வதைத்து விட்டு போன சுவடுகள் மறைவதற்குள் மிகப்பிரபலமான இயக்குநர் மீது பகீர் பாலியல் புகார் எழுந்துள்ளது. 

பிகே, 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இந்தியில் இயக்கியவர் ராஜ்குமார் ஹிரானி. அவர் மீதுதான் அவரது பெண் உதவி இயக்குனர் அதிரடிப் புகாரை தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டு ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளியான சஞ்சு திரைப்படத்தில் பணிபுரிந்தவர் அந்த பெண் உதவி இயக்குனர். ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அந்த பெண் இயக்குனர் ‘’கடந்த மார்ச் மற்றும் செப்டம்பர் 2018 க்குள் ஹிரானி ர்ன்னை பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 3 தேதி சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பினேன். ஹிரானி, அவரது வீட்டு அலுவலகத்தில் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார்’’ என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த குற்றச்சாட்டுகளை ஹிராணி தரப்பு மறுத்துள்ளது. இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் கூறுகையில், ' இது ஒரு தவறான, பொய்யான, உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு' என மறுத்துள்ளார். தமிழில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ், நண்பன் போன்ற படங்களை இந்தியில் இயக்கியவர் இந்த ராஜ்குமார் ஹிரானி.