தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ள மீரா மிதுன்,  நல்ல முயற்சி. எப்போதும் நல்ல வழியில் பயணிக்கிறார் நமது பிரதமர் மோடி. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்.  மோடி வலிமையானவர். மாற்றத்தை உருவாக்குபவர் என புகழ்ந்துள்ளார்.  

மீரா மிதுன் செய்யும் அனைத்து குற்றங்களுக்கும் பின்புலமாக இருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்சரா ரெட்டி இருந்து வருகிறார் என ஜோ மைக்கேல் அளித்திருந்த பேட்டிகளில் கூறி இருந்தார். இப்படியான நிலையில் மீரா மிதுன் பிஜேபிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் எங்கயோ இடிக்குதே என கமெண்ட் அடித்து வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேசிய மீரா மிதுனுக்கும் ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.