ஊரடங்கிலும்... ஓய்வில்லாமல் கண்டமேனிக்கு கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு, அட்ராசிட்டி செய்து வந்த நடிகை மீரா மிதுன், தற்போது மங்களகரமாக, சிவப்பு நிற பட்டு புடவையில், மணப்பெண் போல் விதவிதமாக நகைகள் அணிந்தவாறு வெளியிட்டுள்ள வீடியோ பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி நடிகையின் மகனுக்கு அரிவாள் வெட்டு..! வீட்டுக்குள் புகுந்து 8 பேர் வெறிச்செயல்!
 

மாடலிங் துறையில் அறிமுகமாகி, பல ரியாலிட்டி டான்ஸ் ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு பிரபலமாகி, பின் நடிகையாகவும் உருவெடுத்தவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள், என்னை அறிந்தால், தானா சேர்ந்த கூட்டம் என சில படங்களில், சின்ன சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதுவரை அவரால் கதாநாயகியாக மாறமுடியவில்லை.

எனவே, உலக நாயகன் கமலஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார் மீரா. ஆரம்பத்தில், இவருக்கு சில ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், பின் பிரபல இயக்குனர் சேரன் மீது, இவர் சுமற்றிய பழி பலரையும் கோவம் அடைய செய்தது.  

மேலும் செய்திகள்: கொரோனாவை அழிக்க நரபலி கேட்ட அம்மன்! கோவிலில் தலையை வெட்டி பூசாரி அரங்கேற்றிய கொடூர சம்பவம்!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற பட்ட பின்னரும், இவர் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் பேசிய சில ஆடியோக்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இவை அனைத்தையும் மீரா மிதுன் மறுத்தார். 

கதாநாயகியாக மாற்றும் என நம்பி சென்ற, பிக்பாஸ் கை விட்டாலும், கவர்ச்சி கை விடாது என, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் அதனை சற்றும் கண்டுகொள்ளவில்லை.

மேலும் செய்திகள்: விவாகரத்தான அஜித் பட நடிகைக்கு ப்ரபோஸ் செய்த ரஜினி பட வில்லன்! ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்த பிரபலம்!
 

இப்படி ரணகளமான புகைப்படங்களையும்... வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டு வந்த மீரா, தற்போது பலரையும் அதிர்ச்சியாக்கும் வகையில் திருமண கோலத்தில் தகதகவென மின்னும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

இந்த மணக்கோலம் ரியல் என்றும், இதையும் காப்பி செய்ய வேண்டாம் என்றும் அவர் நெட்டிசன்களுக்கு கூறியுள்ளார். விரைவில் அவர் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார். இந்த மணப்பெண் கோலத்தில், சில திரைப்பட பாடல்களுக்கும் டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.