சினிமாத்துறையில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வரும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகம் இருக்கின்றன. அதிலும் படவாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது அதிகரித்திருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக சினிமாத்துறை மீது அதிகம் எழுந்திருக்கிறது. 

இந்த குற்றாட்டுக்களை ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி கோலிவுட் டோலிவுட்  நடிகைகள் வரை வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றனர். அதிலும் ஸ்ரீரெட்டி இந்த பிரச்சனையை பூதாகரமாக்கி இருக்கிறார்.

ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பல திரைத்துறை பிரபலங்கள் மீது குற்றம் சாட்டி இருந்த ஸ்ரீரெட்டி லிஸ்டில், தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறை பிரபலங்களின் பெயர்கள் வெளியாகி இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என பல நடிகர்களின் பெயர்களை தனது லிஸ்டில் கிழித்து தொங்கவிட்டிருந்தார் ஸ்ரீரெட்டி. அவர் இந்த பிரச்சனையை குறித்து பேசுவதும், பிரபலங்கள் மீது குற்றம் சாட்டுவதும் மீடியாவின் வெளிச்சம் தன் மீது பட வேண்டும் என்ற ஆசையினால் தான் என சிலர் கூறினாலும், சில பிரபலங்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாகவும் பேசி இருக்கின்றனர்.

”காஸ்டிங் கோச்” எனும் இந்த விவகாரம் எந்த அளவிற்கு உண்மை என ஆதாரப்பூர்வமாக ஸ்ரீரெட்டி தெரிவிக்காததாலும், ஸ்ரீரெட்டி மீது யாரும் வெளிப்படையாக புகார் அளிக்காததாலும் இந்த விவகாரம் குறித்து காவல் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதே சமயம் ஸ்ரீரெட்டி விவகாரம் ஊடகங்களில் பிரபலமாகி இருப்பதால், பெரும்பாலான பேட்டிகளின் போது அவர் குறித்து பிற பிரபலங்களிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அப்படி தான் நடிகை மீனாவிடமும் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இந்த கேள்விக்கு பதிலளித்த மீனா, காஸ்டிங் கோச் விவகாரம் உண்மை தான் என தெரிவித்திருக்கிறார். 90களில் இது போன்ற சம்பவங்கள் உண்டு. ஆனால் நான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்ததில்லை என அந்த பேட்டியின் போது மீனா தெரிவித்திருக்கிறார்.

இதனால் பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்திருக்கின்றன என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் இந்த காஸ்டிங் கோச் விவகாரம் மேலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், இனி வரும் காலங்களிலாவது இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.