சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மெல்ல, மெல்ல உலக நாடுகளை ஆட்டிபடைக்கிறது. வல்லரசுகள் கூட கண்டு அஞ்சும் அளவிற்கு கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் தீவிரத்தை கண்டு உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்தியாவில் வைரஸ் தாக்குதலால் 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு மேலும்  6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை மீண்டும் மீட்டெடுப்பதற்காக ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... கொரோனா போண்டாவுக்கு போட்டியா கொரோனா பர்கர்...!

இந்நிலையில் மாஸ்டர் படக்குழு சமூக விலகலை கடைபிடிப்பதாக வெளியாகியுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் மாஸ்டர் படக்குழுவைச் சேர்ந்த தளபதி விஜய், மாளவிகா மோகனன், அனிரூத், ஜெகதீஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கிலும் கட்டுக்கடங்காத கிரண்... கொரோனாவை விட மிரட்டும் கவர்ச்சி..!

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாளவிகா மோகனன், பிரச்சனை வரும் போகும்... கொஞ்சம் ஜில் பண்ணு மாப்பி!... எப்போது வெளியே போக முடியவில்லையே... அப்போ எல்லாம் நாங்க இப்படி... சமூக விலகலில் மாஸ்டர் குழு... நீங்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.