'மாநகரம்', 'கைதி', போன்ற தரமான படங்களை இயக்கி மிக குறிகிய காலத்தில் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர், இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்ட தட்ட 90 சதவீதம் முடிந்து விட்டது. மேலும் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளும் மற்றொரு புறம் நடைபெற்று கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ்  பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடிக்கும் ’ஹிருதயம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, நடிகரும், பாடகருமான, வினித் சீனிவாசன் இயக்கி வருகிறார். 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதனை அறிந்த, மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'ஹிருதயம்' படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென விசிட் அடித்தார். 

இதனை சற்றும் எதிர்பாராத, பிரணவ், மற்றும் படக்குழுவினர் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் லோகேஷ் கனகராஜை வரவேற்று அவருடன் சேர்ந்து செல்பி புகைப்படங்களும் எடுத்து கொண்டனர். இந்த புகைப்படத்தை, ஹிருதயம் படத்தின் இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசன் அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 'மாஸ்டர்' படத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், அவர் தங்களுடைய படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததை நினைத்து பெருமை படுவதாகவும் கூறியுள்ளார்.