பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தவர்.

இந்நிலையில் இவர் தற்போது மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளது... தமிழையும் தமிழ் மக்களையும் உயர்ந்து நிற்கவைத்த பெருமைக்கு சொந்தக்காரரான கலைஞரை இழந்துவிட்டோம் என தனது இறங்கங்களை பதிவு செய்துள்ளார்.

மேலும் கடந்த 21 வருடத்திற்கு முன் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'இருவர்' படத்தில், கருணாநிதியாக நடிக்க வந்த வாய்ப்பை, தான் இழந்து விட்டதாக கூறி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில், மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கருணாநிதியாக நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜூக்கு முன் அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இவருக்கு தான் அழைப்பு வந்ததாகவும் ஆனால் ஒரு சில காரனங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். 

மேலும் மம்மூட்டி மலையாள நடிகராக இருந்தால், கருணாநிதியுடன் நல்ல நட்பில் இருந்தவர். தசாவதாரம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் கலைஞருடன் இணைந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

விரைவில் இவர் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடித்து மலையாளம் மற்றும் தமிழில் தயாராகியுள்ள 'பேரன்பு' திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த படம் அள்ளி விருதுகளை குவித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.