ஆர்.ஜேவாகவும், தொகுப்பாளராகவும் நமக்கு அறிமுகமான மமதியின் வாழ்க்கையில் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் அவை, அனைத்தையும் சிரித்து கொண்டே ஏற்று கொள்கிறார். இவரின் இந்த பொறுமையும் நிதானமான பேசும் தான் பிக்பாஸ் வீட்டில் இவர் நடித்து வருகிறாரோ என்கிற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியது.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் கூட யார் மீது தவறு இருந்தாலும் இருவர் பக்கத்திலும் உள்ள நியாத்தை எடுத்து கூறுபவராக இருந்தவர் மமதி.

இவர் காதலித்து கரம் பிடித்த கணவரையே ஒரு சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். என்பது குறித்து ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். தற்போது அவருடைய குடும்பத்தை பற்றியும் அவர் வாழ்க்கையில் பொருளா தாரா ரீதியாக பட்ட அடிகை பற்றியும் பார்ப்போம்.

மமதியின் தந்தை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், அம்மாவும் நன்கு படித்து நல்ல வேலையில் பணியாற்றியவர். மமதி வசதிகளுக்கு எந்த குறைவும் இல்லாமல் வளர்ந்த பெண். பெற்றோர் இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல கருத்துக்களை சொல்லி கொடுத்து வளர்த்தமையால் இவருக்கு கோபம் கூட வராதாம்.

ஆரம்பத்தில், சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக பெற்று தொகுப்பாளராக பணியாற்றிய இவர், 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக ஊதியம் வாங்கும் தொகுப்பாளராகவும், ஆர்.ஜேவாகவும் மாறினார்.

மேலும் முன்னாள் கணவருக்கும் இவருக்கும், தனித்தனியான நிறுவனங்களும் இருந்ததாம். பின் இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பிஸியாக வேலை பார்த்து, பல வீடுகள், நிலம், மலைப்பகுதி எஸ்டேட் என ஏராளமாக சொத்துக்களை சேர்த்ததாகவும். ஆனால் விவாகரத்து பெற்று பிரியும் போது அனைத்தையும் அவரிடமே விட்டு விட்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

விவாகரத்துக்கு பின் தனியாக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கிய மமதி, அதில் கடும் வீழ்ச்சி அடைந்தார். ஒரு நிலையில், பியானோவை விற்று மும்பை சென்று வேலை பார்த்தார். தொடர்ந்து இரண்டு வருடங்கள் கடுமையான பொருளாதாரச் சிரமங்களை சந்தித்தாராம்.

பிறக்கும் போதே வசதி வாய்ப்போடு பிறந்த இவர் தற்போது, வசிப்பதோ வாடகை வீடு தான். எனினும் அது பற்றி சற்றும் தனக்கு கவலை இல்லை என பெருந்தன்மையோடு கூறுகிறார் மமதி.