’மகள் வயதுப் பெண்ணான எனக்கு பிரிவியூ தியேட்டரில் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த நடிகர்’...நடிகை ரேவதி பகீர்..
பிரபல மலையாள நடிகர் சித்திக் ஒரு பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தன்னிடம் செக்ஸ் வார்த்தைகள் பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் ‘அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயாரா? என்று கேட்டதாகவும் நடிகை ரேவதி சம்பத் பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் சித்திக் ஒரு பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது தன்னிடம் செக்ஸ் வார்த்தைகள் பேசி அத்துமீறி நடந்துகொண்டதாகவும் ‘அட்ஜஸ்ட்மெண்டுக்கு தயாரா? என்று கேட்டதாகவும் நடிகை ரேவதி சம்பத் பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று நண்பகலில் தனது முகநூலில் பக்கத்தில் எழுதிய பதிவில்,...அது 2016ம் வருடம். நிலா என்கிற பிரிவியூ தியேட்டரில் நடிகர் சித்திக்குடன் ‘சுகமாயிருக்கட்டே’ என்ற படம் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்ல என்னிடம் பேச்சுக் கொடுத்தவர் ஒரு ஓட்டலின் பெயரைச் சொல்லி வரச்சொன்னார். காரணம் கேட்டபோது எல்லாம் ஒரு அட்ஜஸ்மெண்ட்தான் என்றதோடு அவரது செக்ஸ் திருவிளையாடல் குறித்து அசிங்கமான வார்த்தைகளில் பேச ஆரம்பித்தார்.
அப்போது எனக்கு 16 வயது. சரியாகச் சொன்னால் அவருடைய மகள் வயது. இதைப் பற்றி இப்போது முகநூலில் திடீரென பதிவு செய்யக்காரணமே, அவர் கேரள நடிகர் சங்கத்தில் [அம்மா] பெண்களுக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்ததைப் பார்த்துதான். இவரிடம் இவர் மகள் பத்திரமாக இருக்கிறாரா என்றே சந்தேகமாக இருக்கும்போது பெண்கள் பாதுகாப்பைப் பற்றி இவரெல்லாம் பேசுவது பெரும்கொடுமை இல்லையா? என்று ஆவேசமாகப் பதிவிட்டிருக்கிறார் ரேவதி.
இது குறித்து இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ள ரேவதி, ‘தற்போது எனது பதிவுக்குக் கீழே அசிங்கமான கமெண்டுகள் ஆயிரக்கணக்கில் குவிந்துவருகின்றன. இந்தப் பதிவைப் போட்டுப் பிரபலமாகி அதன் மூலம் நான் பட வாய்ப்புப் பெற நாடகமாடுவதாகவும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் எழுதுகிறார்கள்’என்கிறார் ரேவதி.