*    ஒரு குறும்படத்துக்கு இசையமைத்துவிட்டாலே ‘நானெல்லாம்....!’ என்று ஸீன் போடும் மியூஸிக் டைரக்டர்களுக்கு நடுவில், விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட அத்தனை (கமல் தவிர) முக்கிய ஹீரோக்களின் படங்களுக்கு இசைத்துவிட்டார் இமான். ஆனாலும் மனுஷனுக்கு தலைகனம் மிஸ்ஸிங் தான். இப்போது ஜீவா நடித்திருக்கும் ‘சீறு’ படத்தின் ஆல்பத்தில் பிரபல பாடகர் சங்கர்மகாதேவன் மகனும் ஒரு பாடல் பாடியிருக்கிறார், கூடவே மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தியும் ஒரு பாடல் பாடியிருக்கிறார், ராஜகணபதி எனும் புதிய பாடகரும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். 
‘நான் எல்லா பாடகர்களையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். எல்லோரும் ஒன்றுதான். கலைஞர்களில் நான் வித்தியாசம் பார்ப்பதில்லை!’ என்று இமான் ஓப்பனாக பேசி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். 
(இமான், தேவனின் முன்னே அனைவரும் சமம்!ன்னு நினைக்கிற டீமாச்சே)

*     தமிழ்சினிமாவில் தைரியமான பொண்ணு! எனும் பெயரெடுத்த அமலாபாலுக்கு கடந்த சில வருடங்களாக பெரிய படங்களில் வாய்ப்பில்லாமல் இருந்தது. இந்த நிலையில் இப்போது, அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘நரப்பா’வில் வெங்கடேஷின் இளமை கால காதலியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இங்கே மஞ்சுவாரியார் செய்த ரோலை அங்கே பிரியாமணி செய்கிறார். 
(முத்தழகா இல்ல மைனாவா? பார்த்துடலாம்டி ஒரு கை)

*    தெலுங்கு, தமிழ் சினிமாவின் நீண்ட கால ‘டார்லிங்’ என்றால் அது அமுல்பேபி அனுஷ்காதான். ’இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக எடையை கூட்டியவரால் என்ன பண்ணியும் பெரியளவில் குறைக்க முடியவில்லை. அனுஷ்காவின் மார்க்கெட் அவ்ளோதான் என்று போட்டி நடிகைகள் குஷியாகினர். ஆனால் அனுஷை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களோ, திரையில் அவரை ஸ்லிம்மாக காட்டும் கிராஃபிக்ஸுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். அப்படி என்ன அவகிட்ட ஸ்பெஷல்? என்று கன்னாபின்னான்னு கடுப்பாகிறார்கள் போட்டி பொண்ணுங்க. 
(இன்னொருவாட்டி இஞ்சி இடுப்பழகி பாருங்க புரியும்)

*    விஜய் சேதுபதிக்குன்னு தனி மாஸான ரசிகப்பட்டாளம் இருக்குது. ஆனாலும் மனுஷன் அதையெல்லாம் பத்தி அலட்டிக்காமல், தன் ரசிகர்களை பற்றியெல்லாம் கண்டுக்காமல் செகண்ட் ஹீரோ, கூட்டத்தில் ஹீரோ, வில்லன் ரோல் என கலந்து கட்டி பண்ணி வருகிறார். ரஜினியோடு பேட்ட, சிம்புவோடு செக்கச்சிவந்த வானம் என்று கலக்கியவர் இப்போது விஜய்யோடு மாஸ்டர் பண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் படத்திலும் விஜய்சேதுபதியை இணைக்க பேச்சுவார்த்தை நடக்குது என்கிறார்கள். 
(இதெல்லாம் மேட்டரில்லை, நயன்தாராவின் ஃபேவரைட் ஹீரோவே நம்மாளுதான் என்பதே ஹைலைட்)
*    ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’ என மாஸ் படங்களில் நடித்த, நடித்துவரும் மாளவிகா மேனனுக்கு என்னாச்சுன்னு தெரியலை. திடுதிப்புன்னு கன்னாபின்னான்னு ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அப்லோடு பண்ணிடுச்சு. இப்ப ரசிகர்களோ ‘ப்ளீஸ் தூங்கவிடுங்க!’ என்று கமெண்ட் போட்டு கதறுமளவுக்கு போயிடுச்சு நிலைமை. 
(அப்ப சூப்பர் ஸ்டாரையும், இப்ப தளபதியையும் நீங்க தூங்க விடலையா மாளவி?)